ஜெனீவா தளரும் நம்பிக்கைகள்



மனித உரி­மைகள் பேர­வையின், 32 ஆவது கூட்­டத்­தொடர், வரும் 13ஆம் திகதி ஆரம்­பித்து, அடுத்­த­மாதம் 1ஆம் திகதி வரை இடம்­பெ­ற­வுள்­ளது. 2009ஆம் ஆண்டு இலங்­கையில், போர் முடி­வுக்கு வந்த பின்னர், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொடர் ஆரம்­பிக்கப் போகி­றது என்றால், அர­சாங்­கத்­துக்கு அது ஒரு கிலி­யான விட­ய­மா­கவே இருந்து வந்­தது.
ஆனால், கடந்த ஆண்டு ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்­னரும், கடந்த செப்­ரெம்­பரில் நடந்த ஐ.நா. மனித உரி­மைகள் பேரவைக் கூட்­டத்­தொ­ட­ருக்குப் பின்­னரும், ஜெனீவா கூட்­டத்­தொடர் என்­பது அர­சாங்­கத்­துக்கு அச்­ச­மில்­லாத ஒரு விட­ய­மாக மாறி­விட்­டது.
அது­போ­லவே தமிழ் மக்­க­ளுக்கும் இந்தக் கூட்­டத்­தொடர் மீதான ஆர்­வமும் குறைந்து போயி­ருக்­கி­றது.
ஐ.நா. மனித உரி­மைகள் பேரவைக் கூட்ட நெருக்­க­டியை இல­கு­வாக வெற்றி கொள்ள முடியும் என்ற நம்­பிக்கை அர­சாங்­கத்­துக்கு இருப்­ப­தாக, கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம கூறி­யி­ருந்தார். அமைச்­சர்கள் மஹிந்த அம­ர­வீர, ரவி கரு­ணா­நா­யக்க ஆகி­யோ­ருடன் இணைந்து அவர் நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில், இப்­போது போர்க்­குற்ற விசா­ரணை பற்­றிய பேச்­சுக்­களே இல்லை என்றும், யாரையும், மின்­சாரக் கதி­ரையில் ஏற்றும் தேவையும் இல்லை என்றும் தெரி­வித்­தி­ருந்­தனர். பொறுப்­புக்­கூறல் விவ­காரம் என்­பது இப்­போது பின்­தள்­ளப்­பட்டு விட்­டது என்­ப­தையே அமைச்­சர்­களின் அந்தக் கருத்து வெளிப்­ப­டுத்­தி­யது. முன்­ன­ரெல்லாம் ஜெனீவா விவ­காரம் குறித்து அமைச்­சர்கள் அதி­க­ளவில் வாய்ச்­ச­வ­டால்­களை விடு­வ­தற்கு தயங்­கு­வார்கள். ஏனென்றால், ஜெனீ­வாவில் எங்­கி­ருந்து பூதம் கிளம்பும் என்று தெரி­யாத நிலை இருக்கும். அதற்­காக, அமைச்­சர்கள், அதி­கா­ரி­களைக் கொண்ட பெரிய பட்­டா­ளத்­தையே மஹிந்த ராஜப க் ஷ ஜெனீ­வா­வுக்கு அனுப்பும் வழக்­கத்தைக் கொண்­டி­ருந்தார்.
ஒரு முறை 72 பேர் கொண்ட அரச குழு­வொன்று கூட ஜெனீ­வா­வுக்குச் சென்­றது. அந்­த­ள­வுக்கு அர­சாங்­கத்­துக்கு சர்­வ­தேச அழுத்­தங்கள் காணப்­பட்­டன.
ஆனால், இப்­போ­தைய அர­சாங்கம், ஜெனீ­வாவைத் திருப்­திப்­ப­டுத்தும் விட­யத்தில் பெரி­தாக எதையும் சாதிக்­கா­விட்­டாலும், ஜெனீவா குறித்து அலட்­சி­ய­மான, நிலையில் தான் இருக்­கி­றது.ஜெனீவா நெருக்­க­டியை வென்று விடலாம் என்ற நம்­பிக்­கையை அமைச்­சர்கள் இல­கு­வாக வெளிப்­ப­டுத்­து­கி­றார்கள். இது, மனித உரிமை விவ­கா­ரங்­களில் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களால் ஏற்­பட்ட நம்­பிக்­கை­யல்ல.
அதற்கும் அப்பால், இலங்­கைக்கும், மேற்­கு­லக நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உற­வு­களின் நெருக்­கத்­தினால் ஏற்­பட்­டுள்ள நம்­பிக்கை என்றே குறிப்­பி­டலாம்.
குறிப்­பாக அமெ­ரிக்­கா­வுடன் இலங்­கைக்கு ஏற்­பட்­டுள்ள நெருக்­க­மான உறவு, ஜெனீவா நெருக்­க­டி­களில் இருந்து பெரு­ம­ளவில் விடு­ப­டு­வ­தற்கு அர­சாங்­கத்­துக்குக் கைகொ­டுத்­தி­ருக்­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை.
மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்­துக்கு கிடைக்­கா­த­ள­வுக்கு கால­அ­வ­கா­சங்கள் கொடுக்­கப்­ப­டு­கின்­றன. அதி­க­ளவு அழுத்­தங்­களும் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வ­தில்லை. இல­கு­வாகச் சொல்­வ­தானால், ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை இப்­போது இலங்கை விட­யத்தில் உச்­சக்­கட்ட பொறு­மையைக் கடைப்­பி­டிக்­கி­றது.
இதெல்­லா­வற்­றையும் சாத்­தி­ய­மாக்­கி­யது, ஆட்சி மாற்றம் தான். கொடுத்த வாக்­கு­று­தியை காப்­பாற்­றாமல் விட்­டாலும் கூட, அச்­ச­மின்றி ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் கூட்ட அரங்­கிற்குள் துணிச்­ச­லோடு பிர­வே­சிக்கும் நிலையில் அர­சாங்கம் இருக்­கி­றது. இந்த அர­சாங்கம் பத­விக்கு வந்த மூன்று மாதங்­களில், ஐ.நா. மனித உரி­மைகள் பேரவைக் கூட்­டத்­தொ­டரில் இலங்­கைக்கு எதி­ரான அடுத்த தீர்­மா­னத்தைக் கொண்டு வர­வி­ருந்­தது அமெ­ரிக்கா.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், பொறுப்­புக்­கூறும் பொறி­மு­றையை உரு­வாக்க அர­சாங்கம் ஆறு­மாத கால­அ­வ­காசம் கேட்­டது, ஆனால் அந்த ஆறு மாதங்­க­ளுக்குள் எதையும் செய்­யா­ம­லேயே, 2015 செப்­ரெம்பர் அமர்­வுக்குச் சென்­றது இலங்கை அர­சாங்கம். அங்கு இன்­னொரு தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. அதற்கு இலங்­கையும் இணங்கி, இணை அனு­ச­ரணை வழங்­கி­யது. வெளி­நாட்டு நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய நம்­ப­க­மான பொறுப்­புக்­கூறல் பொறி­முறை ஒன்று உரு­வாக்­கு­வ­தாக அர­சாங்கம் வாக்­கு­றுதி அளித்­தது. இந்த தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு, எட்டு மாதங்கள் கழிந்து விட்ட நிலையில், மீண்டும் ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை கூடப் போகி­றது. ஆனால் பொறுப்­புக்­கூறும் பொறி­முறை ஒன்றை அர­சாங்கம் இன்­னமும் உரு­வாக்­க­வில்லை. அதனை அமைப்­ப­தற்­கான எந்­த­வொரு பணி­யையும் முன்­னெ­டுக்­க­வில்லை.
பொறுப்­புக்­கூறல் சார்ந்த விவ­கா­ரங்கள் தொடர்­பாக இலங்கை அர­சாங்கம் எடுத்­துள்ள நட­வ­டிக்­கை­களின் முன்­னேற்றம் தொடர்­பாக இந்தக் கூட்­டத்­தொ­டரில் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வாய்­மொழி அறிக்­கையை சமர்ப்­பிக்க வேண்டும்.

ஆனால், பொறுப்­புக்­கூறல் சார்ந்து அர­சாங்­கத்­தினால் என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என்று அவர் கூறப்­போ­கிறார் என்று தெரி­ய­வில்லை.
இந்த நிலையில், காணா­மற்­போனோர் பிரச்­சி­னையைக் கையா­ளு­வ­தற்­கான செய­லகம் ஒன்றை அமைக்க கடந்த வாரம் அமைச்­ச­ர­வையில் அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.
இந்த செய­ல­கத்தை அமைப்­ப­தற்கு, எட்டு மாதங்கள் பிடித்­தி­ருக்­கின்­றன என்றால், காணா­மற்­போ­ன­வர்கள் தொடர்­பாக இந்தச் செய­லகம் நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு இன்னும் எத்­தனை காலம் ஆகுமோ? என்ற கேள்வி தான் எழு­கி­றது.
பொறுப்­புக்­கூறல் என்­பது தனியே காணா­மற்­போனோர் விவ­கா­ரத்­துடன் சம்­பந்­தப்­பட்ட விட­ய­மல்ல. போர்க்­குற்­றங்கள், மனி­தா­பி­மா­னத்­துக்கு எதி­ரான குற்­றங்கள், மனித உரிமை மீறல்கள் என்று பல்­வேறு பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டா­தி­ருக்­கின்­றன.
இந்தப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கான வழி­மு­றை­களை அர­சாங்கம் இன்­னமும் கூட தேட­வில்லை.
அதே­வேளை, மீறல்கள் குறித்த விசா­ர­ணை­களில் வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளுக்கு இட­ம­ளிப்­ப­தில்லை என்ற நிலைப்­பாட்டை அர­சாங்கம் எடுத்­தி­ருப்­ப­தாக, அண்­மையில் முப்­படை அதி­கா­ரி­க­ளிடம், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார்.
இதன் மூலம், ஜெனீ­வாவில் அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்கி ஏற்றுக் கொண்ட தீர்­மானம் கேள்­விக்­குள்­ளாக்­கப்­ப­டு­கி­றது, அர­சாங்கம் ஜெனீ­வாவில் கொடுத்த வாக்­கு­று­தி­களை அப்­ப­டியே நிறை­வேற்­று­கின்ற எண்­ணத்தில் இல்லை என்­பது இந்த விவ­கா­ரத்தின் மூலம் வெளிப்­ப­டு­கி­றது.
அதை­விட, குற்­ற­வா­ளி­களைத் தண்­டிக்கும் பொறி­முறை ஒன்றை உரு­வாக்­கவும் அர­சாங்கம் தயா­ராக இல்லை. அதற்குப் பதி­லாக உண்­மை­களை ஒப்­புக்­கொள்ள வைக்கும் ஒரு பொறி­மு­றையை தான் தேர்வு செய்­துள்­ளது. இது தென்­னா­பி­ரிக்­காவில் கையா­ளப்­பட்­டது.
அந்தப் பொறி­மு­றையின் ஊடாக, குற்­ற­மி­ழைத்த படை­யி­னரை தண்­ட­னையில் இருந்து தப்­பிக்க வைக்­கவே முயற்­சிக்­கி­றது அர­சாங்கம். அர­ச­ப­டை­க­ளி­னதும், சிங்­கள மக்­க­ளி­னதும் எதிர்ப்பைச் சம்­பா­தித்துக் கொள்­வதை தவிர்ப்­ப­தற்­கா­கவே, அர­சாங்கம் இந்த முறையில் அணுகுகின்றது.
இந்தக் கட்டத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்களின் உணர்வுகளையோ எதிர்பார்ப்புகளையோ அரசாங்கம் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. சர்வதேச சமூகத்துக்கும் அதுபற்றிய அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.
பொறுப்புக்கூறல் சார்ந்த எந்த ஒரு உருப்படியான செயற்றிட்டத்தையும், இன்னமும் நடைமுறைப்படுத்தாத நிலையில் தான், துணிச்சலோடு அடுத்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரை எதிர்கொள்ளத் தயாராகியிருக்கிறது அரசாங்கம்.
இதனால் தான், இம்முறை ஜெனீவா கூட்டத்தொடர் பற்றிய ஆர்வம் தமிழ் மக்களிடம் குறைந்து போயிருக்கிறது. அதுமட்டுமன்றி, சர்வதேச சமூகம் தொடர்பாக தமிழ் மக்களுக்கு இருந்து வந்த நம்பிக்கைகளும் தளர்ந்து போகத் தொடங்கியுள்ளதையே இது உறுதிப்படுத்துகிறது.

நன்றி வீரகேசரி

No comments:

Copyright © 2016 Kilinochchi