கலைச்சோலை வெளியீட்டுவிழா-2016.Photos

கிளி.தருமபுரம் மத்திய கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தினால் கலைச்சோலை எனும் பெயரில் வருடந்தோறும் வெளியிடப்படுகின்ற சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வானது இன்று கல்லூரியில் இடம்பெற்றது.

கல்லூரி முதல்வர் திரு சி. முருகானந்தன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக புநகரி கோட்ட கல்விப் பணிப்பாளர் திரு சு. தர்மரட்ணம் அவர்களும், கௌரவ விருந்தினராக கோரக்கன்கட்டு கிராம அலுவலர் திரு S. அஜித்குமார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இதில் முதல் பிரதியை பெற்றாரான திரு பெரியான் சுதர்சன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
சிறப்புப் பிரதிகளைத் திருமதி ஜெயக்குமார் வனிதா, திருமதி விஸ்வநாதன் வனஜா, திரு மாணிக்கம்பிள்ளை பெரியண்ணன்பிள்ளை ஆகியோரும் முதன்மைப் பிரதிகளை திருமதி நவேந்திரன் ஜெயவதனி, திரு குலேந்திரன் ஜெயசீலன், திரு துரைராஜ் கிருஷ்ணசிங்கம், திருமதி நாகேஸ்வரி உதயகுமார், திரு தனபாலசிங்கம் ரூபகுமார் ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.

நூல் ஆய்வுரையை கண்டாவளை பிரதேச செயலகத்தின் திட்டமிடல் உதவியாளர் திரு தி. பிரபாகரன் அவர்களும் நூலுக்கான அணிந்துரையை எமது கல்லூரியின் பழைய மாணவனும் கவிஞருமாகிய திரு மா. ஜெகநாதன் அவர்களும் வழங்கினர். ஏற்புரையை கல்லூரி ஆசிரியை திருமதி சி. ஜோதீஸ்வரன் அவர்கள் வழங்கினார்.













No comments:

Copyright © 2016 Kilinochchi