கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற பெண் பரிசாதகர் ஒருவர் மூன்று நாள் காச்சலை தொடர்ந்து வைத்தியசாலையலில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தமையடுத்து அரவது உடல் யாழ் போதானா வைத்தியசாலையின் உடற்கூற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி விநாயகபுரத்தைச்சேர்ந்த ராசா றமணி வயது 44 என்பவர் கடந்த 04-06-2016 அன்று திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையின் அவசர சிகிசை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அன்றிரவே விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் மறுநாள் காலையில் மரணமடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் சட்ட மருத்துவ வைத்தியவர் ஜெயவர்த்தன மற்றும் கிளிநொச்சி மவாட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி க. திருலோகமூர்த்தி ஆகியோர் ஆரம்ப கட்ட விசாரணைகளை அடுத்து உடல் யாழ் போதான வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்கு ஞாயிறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையின் அவசர சிகிசை பிரிவில் அனுமதிகப்பட்டு சிகிசையின் பின்னர் ஓரளவு சாதரண நிலைமைக்கு திரும்பிய நிலையில் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் குறித்த நோயாளி அன்றிரவு இரவு மீண்டும் சுகயீனம் காரணமாக அவதிப்பட்டுள்ளார் என்றும் ஆனால் வைத்தியசாலை அதனை கண்டுகொள்ளவில்லை என்றும் இதனாலேயே அவர் இறந்துள்ளதாகவும் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய பிரதி பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மா.ஜெயராசா அவர்களிடம் கேட்ட போது

வைத்தியசாலையின் பெண் பரிசாதகர் வைத்தியசாலையின் அவசர சிகிசை பிரிவில் அனுமதிகப்பட்டு மூளைக் காச்சலுக்கான சிகிசை அளிக்கப்பட்டு நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு உடல் யாழ் போதானா வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளது.

இதே வேளை வைத்தியசாலையின் கவனயீனமும் காரணமா எனவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே உடற் கூற்று பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் இது தொடர்பான உண்மை நிலைமையை தெரியப்படுத்துவதாகவும் குறிப்பிட்ட அவர்
பொது மக்கள் ஒரு காச்சல் ஏற்பட்டாலும் வைத்தியசாலைக்கு சென்று பூரண சிகிசையை பெற்றுக்கொள்ளுமாறு அறிவித்துள்ளார்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை எதிர்­வரும் புதன்­கி­ழமை 8 ஆம் திகதி பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது.
ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி இந்த நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­ரே­ர­ணையை கடந்த மார்ச் மாதம் 24 ஆம் திகதி சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­ய­விடம் கைய­ளித்­தி­ருந்­தது. இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சியைச் சேர்ந்த 34 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கையெ­ழுத்­திட்­டுள்­ளனர்.
நிதியமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க வரவு செல­வுத்­திட்­டத்­துக்கு அப்பால் மற்­று­மொரு மினி வரவு --செல­வுத்­திட்­டத்தை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வைக்­கொண்டு சமர்ப்­பிக்­கச் ­செய்­தமை மேலும் பெறு­மதி சேர் வரியை அதி­க­ரித்­தது போன்ற விட­யங்­க­ளுக்­காக இந்த நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­ரே­ர­ணையை ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் முன்­வைத்­துள்­ளனர்.
நல்­லாட்சி அரசின் அமைச்­ச­ரொ­ரு­வ­ருக்கு எதி­ராக பாரா­ளு­மன்­றத்தில் விவா­தத்­திற்கு எடுத்­துக்­கொள்­ளப்­படும். முத­லா­வது நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­ரே­ரணை இது­வென்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் அமைச்சர் ஜோன் அம­ர­துங்­க­வுக்கு எதி­ரா­கவே முதல் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளித்­தனர். ஆனால் கட்­சித்­த­லை­வர்கள் கூட்­டத்தில் அப்­பி­ரே­ர­ணையை விவா­தத்­துக்கு எடுக்­கும்­படி அவர்கள் கோரிக்கை விடுக்­க­வில்லை. அதனால் அந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விவா­தத்­துக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.
நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவின் மீதான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை தோல்­வி­ய­டையும் என்­பது ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யின­ருக்கு நன்கு தெரியும்.
இருந்தும் நம்­பிக்­கை­யில்­லாப் ­பி­ரே­ரணை மூலம் அர­சாங்­கத்தை விமர்­சிக்க அவர்கள் ஒரு சந்­தர்ப்­பத்தை பெறு­கின்­றனர். அர­சாங்கம் இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை தோற்­க­டிக்க சகல நட­வ­டிக்­கை­க­ளையும் மேற்­கொண்­டுள்­ளது.
நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­­ரேரணை விவா­தத்­துக்கு வரும் எதிர்­வரும் 8 ஆம் திகதி ஆளும் தரப்­பைச்­சேர்ந்த அனைத்து அமைச்­சர்களும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் கட்­டா­ய­மாக பாரா­ளு­மன்­றத்­துக்கு வருகை தர­வேண்­டு­மென்றும் வெளி­நா­டு­க­ளுக்கு சென்­றுள்ள அமைச்­சர்கள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நாடு திரும்ப வேண்­டு­மென்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கண்­டிப்­பான பணிப்­புரை விடுத்­துள்ளார். 8 ஆம் திகதி இந்த நம்­பிக்­கை­யில்­லாப் ­பி­ரே­ரணை மீதான விவாதம் பாரா­ளு­மன்­றத்தில் மாலை 2.00 மணி முதல் 6.00 மணி வரை நடை­பெறும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. மே தினத்தின் போது ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யி­னரால் ஏற்­பாடு செய்­தி­ருந்த கிரு­லப்­பனை கூட்டம் பிசு­பி­சுத்துப் போன­தை­ய­டுத்து ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் சோர்­வ­டைந்து போயி­ருந்­தனர். அந்த சோர்­வைப்­போக்கி மீண்டும் கட்­சி­யினருக்கு உத்­வே­கத்தை ஏற்­ப­டுத்த இந்த நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­ரே­ரணை உத­வு­மென ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்­சி­யினர் நம்­பு­கின்­றனர்.
சச்­சின்வாஸ் --- மஹிந்த ரக­சிய சந்­திப்பு
பல்­வேறு மோச­டிக்­குற்­றச்­சாட்­டுக்­களின் பேரில் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்ட மஹிந்த ராஜ­ப­க் ஷவின் நெருங்­கிய உற­வான சச்­சின்வாஸ் குண­வர்­தன திடீ­ரென மைத்­திரி தரப்­புக்கு தாவினார். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பலப்­பிட்­டிய தொகுதி அமைப்­பா­ள­ராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் நிய­மிக்­கப்­பட்டார். மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியின் போது இடம்­பெற்ற ஊழல்கள் மோச­டி­களை அவர் வெளிச்­சத்­துக்கு கொண்டு வருவார் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. இருந்தும் சச்­சின்வாஸ் குண­வர்­த­ன­வுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவுக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பொன்று கடந்த 31 ஆம் திகதி கொழும்பில் இடம்­பெற்­றுள்­ள­தாக ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன.
இந்த சந்­திப்பை யொஹான் ரத்­வத்த ஏற்­பாடு செய்­த­தா­கவும் அவ­ரது வீட்­டி­லேயே இச்­சந்­திப்பு இடம்­பெற்­ற­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது. இந்த சந்­திப்பின் பின்­ன­ணியில் ஏதா­வது சூழ்ச்சி இருக்­க­லா­மெ­னவும் சந்­தேகம் எழுப்­பப்­ப­டு­கின்­றது.
கடந்த மஹிந்த ஆட்­சியில் ஜனா­தி­பதி செய­ல­கத்­திற்கு சொந்­த­மான 32 வாக­னங்­களை முறை­யற்ற வகையில் பயன்­ப­டுத்­தி­யது உட்­பட பல குற்­றச்­சாட்­டுக்கள் அவர் மீது சுமத்­தப்­பட்­டுள்­ளன. இருந்தும் சச்சின் வாஸ் குண­வர்­தன மைத்­திரி தரப்­புக்கு மாறி அரசு தரப்பு சாட்­சி­யாக மாறிய பின்னர் அவர் மீதான விசா­ர­ணைகள் எதுவும் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை.
ஊழல் மோச­டியில் ஈடு­பட்டோர் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டா­தது குறித்து அதி­ருப்தி
அர­சாங்­கத்­தையும் ஜனா­தி­ப­தி­யையும் பத­விக்கு கொண்டு வரு­வ­தற்கு கோட்டே விகா­ரா­தி­பதி அமரர் மாது­லு­வாவே சோபித தேரர் தலை­மையில் சிவில் சமூக அமைப்­புகள் தொழிற்­சங்­கங்கள் புத்­தி­ஜீ­விகள் ஒன்­றி­ணைந்து செயற்­பட்­டன. மஹிந்த ஆட்­சியில் ஊழல் மோசடி அதி­க­ரித்துக் காணப்­ப­டு­வது குறித்தும் இதி­லி­ருந்து நாட்டை மீட்­டுக்­கொள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் மக்கள் பொது­வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வாக்­க­ளிக்க வேண்­டு­மெ­னவும் அவர்கள் பிர­சா­ரத்தில் ஈடு­பட்­டுள்­ளனர்.
மஹிந்த ஆட்­சியில் ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்­ட­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்த மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யாக பத­வி­யேற்­ற­வுடன் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­ப­டு­மெ­னவும் அப்­போது இவர்கள் மேடை­களில் முழக்­க­மிட்­டனர்.
ஜனா­தி­ப­தி­யாக மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்றார். புதிய அர­சாங்கம் தெரிவு செய்­யப்­பட்­டது. ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ரானார். மஹிந்த ஆட்­சியின் ஊழல் மோச­டி­களை விசா­ரணை செய்ய ஆணைக்­கு­ழுக்கள் நிய­மிக்­கப்­பட்­டன. விசா­ர­ணைகள் ஆரம்­ப­மா­கின. பலர் மீது விசா­ரணை நடை­பெற்­றது. விசா­ரணை முடி­வுற்ற பின்னர் 26 கோவைகள் வழக்கு தொட­ரு­வ­தற்­காக சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டன.
ஆனால் இது­வரை ஒரு வழக்­கா­வது தொட­ரப்­ப­ட­வில்லை.
நல்­லாட்­சிக்­கான அமைப்பு இந்த விடயம் குறித்து அதி­ருப்தி தெரி­வித்து வந்­தது. இருந்தும் எது­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ளப்­ப­டா­த­தை­யிட்டு அந்த அமைப்பு அர­சுக்கு எதி­ராக மக்­களைத் திரட்டி போராட்டம் நடத்­தப்­போ­வ­தாக எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. ஊழல் மோச­டிகள், அதி­கார துஷ்­பி­ர­யோகம், முறை­கே­டுகள் தொடர்­பான குற்­றச்­சாட்­டு­களில் ஈடு­பட்­ட­வர்கள் தொடர்­பாக நல்­லாட்சி அர­சாங்கம் எது­வித நட­வ­டிக்­கையும் எடுக்­காமல் அவர்­க­ளைக்­காப்­பாற்றும் முயற்­சியில் ஈடு­ப­டு­வ­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­துள்­ளன.
ஊழல் மோச­டி­களில் ஈடு­பட்டு வழக்கை எதிர்­நோக்­கி­யுள்­ள­வர்­க­ளுக்கு நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­களை வழங்கி அழகு பார்ப்­ப­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­துள்­ளன.
மஹிந்த ஆட்­சியில் தொலைத் தொடர்­புகள் ஒழுங்­கு­ப­டுத்தும் ஆணைக்­கு­ழுவின் பணிப்­பா­ள­ரா­க­வி­ருந்­தவர் அனுஷ பெல்­பிட்ட. பணிப்­பாளர் சபையில் பதவி வழி உறுப்­பி­ன­ராக முன்னாள் ஜனா­தி­ப­தியின் லலித் வீர­துங்க இருந்தார். இந்த இரு­வரும் நடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது மஹிந்த ராஜ­ப­க் ஷவின் வெற்­றிக்­காக தொலை தொடர்­புகள் ஒழுங்­கு­ப­டுத்தும் ஆணைக்­கு­ழுவின் 600 மில்­லியன் ரூபா­வுக்கு இப்­பு­ட­வை­களை கொள்­வ­னவு செய்­தது தொடர்­பான குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ளது. இருந்தும் அனுஷ பெல்­பிட்­ட­வுக்கு நல்­லாட்சி அர­சாங்கம் அமைச்­சொன்றில் மேல­திக செய­லாளர் பதவி வழங்­கி­யுள்­ளது. இப்­போது இவ்­வி­டயம் தொடர்­பாக பாரிய சர்ச்­சைகள் எழுந்­துள்­ளன.
ஷிராந்­தியின் ஹோட்டல் கட்­டணம் செலுத்­து­வது யார்?
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜ­பக் ஷ 2014 ஆம் ஆண்டு வெசாக் கொண்­டாட்­டங்­களைக் கண்டு களிப்­ப­தற்­காக பிரான்ஸ் நக­ருக்கு சென்­றி­ருந்தார். அப்­போது இவர் பிரான்­ஸி­லுள்ள ஆடம்­பர ஹோட்­ட­லொன்றில் தங்­கி­யுள்ளார். இந்த ஹோட்­டலில் ஒரு நாள் தங்­கு­வ­தற்கு கட்­ட­ண­மாக 2573746 ரூபா அற­வி­டப்­ப­டு­கின்­றது.
ஷிராந்தி ராஜ­ப­க் ஷவுடன் சென்­ற­வர்­களும் இந்த ஹோட்­டலில் ஜனா­தி­ப­திகள் பயன்­ப­டுத்தும் அள­வி­லான அறை­களை பயன்­ப­டுத்­தி­யுள்­ளனர்.
ஷிராந்தி ராஜ­பக் ஷ குழு­வினர் தங்­கிய ஹோட்டல் கட்­ட­ணத்தை இந்த அரசாங்கம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் வரிப்பணத்திலேயே ஷிராந்தி ராஜபக் ஷ குழுவினரின் ஹோட்டல் கட்டணங்களை செலுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விசனம் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எளிமையான பயணம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜி7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சாதாரண வர்த்தக விமானமொன்றிலேயே பயணம் செய்துள்ளார். இவர் பிரத்தியேக விமானத்தில் செல்லாததன் காரணமாக இவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்படவில்லை என்றும் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தக விமானமொன்றில் சிங்கப்பூருக்குச் சென்று அங்கு நான்கு மணித்தியாலங்கள் காத்திருந்து அதன் பின்னர் ஜப்பானுக்கு புறப்பட்டுச்சென்றுள்ளார். இதன் காரணமாக பெருந்தொகைப்பணம் சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்,

நன்றி வீரகேசரி


மனித உரி­மைகள் பேர­வையின், 32 ஆவது கூட்­டத்­தொடர், வரும் 13ஆம் திகதி ஆரம்­பித்து, அடுத்­த­மாதம் 1ஆம் திகதி வரை இடம்­பெ­ற­வுள்­ளது. 2009ஆம் ஆண்டு இலங்­கையில், போர் முடி­வுக்கு வந்த பின்னர், ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொடர் ஆரம்­பிக்கப் போகி­றது என்றால், அர­சாங்­கத்­துக்கு அது ஒரு கிலி­யான விட­ய­மா­கவே இருந்து வந்­தது.
ஆனால், கடந்த ஆண்டு ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்­னரும், கடந்த செப்­ரெம்­பரில் நடந்த ஐ.நா. மனித உரி­மைகள் பேரவைக் கூட்­டத்­தொ­ட­ருக்குப் பின்­னரும், ஜெனீவா கூட்­டத்­தொடர் என்­பது அர­சாங்­கத்­துக்கு அச்­ச­மில்­லாத ஒரு விட­ய­மாக மாறி­விட்­டது.
அது­போ­லவே தமிழ் மக்­க­ளுக்கும் இந்தக் கூட்­டத்­தொடர் மீதான ஆர்­வமும் குறைந்து போயி­ருக்­கி­றது.
ஐ.நா. மனித உரி­மைகள் பேரவைக் கூட்ட நெருக்­க­டியை இல­கு­வாக வெற்றி கொள்ள முடியும் என்ற நம்­பிக்கை அர­சாங்­கத்­துக்கு இருப்­ப­தாக, கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் அமைச்சர் மலிக் சம­ர­விக்­கி­ரம கூறி­யி­ருந்தார். அமைச்­சர்கள் மஹிந்த அம­ர­வீர, ரவி கரு­ணா­நா­யக்க ஆகி­யோ­ருடன் இணைந்து அவர் நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில், இப்­போது போர்க்­குற்ற விசா­ரணை பற்­றிய பேச்­சுக்­களே இல்லை என்றும், யாரையும், மின்­சாரக் கதி­ரையில் ஏற்றும் தேவையும் இல்லை என்றும் தெரி­வித்­தி­ருந்­தனர். பொறுப்­புக்­கூறல் விவ­காரம் என்­பது இப்­போது பின்­தள்­ளப்­பட்டு விட்­டது என்­ப­தையே அமைச்­சர்­களின் அந்தக் கருத்து வெளிப்­ப­டுத்­தி­யது. முன்­ன­ரெல்லாம் ஜெனீவா விவ­காரம் குறித்து அமைச்­சர்கள் அதி­க­ளவில் வாய்ச்­ச­வ­டால்­களை விடு­வ­தற்கு தயங்­கு­வார்கள். ஏனென்றால், ஜெனீ­வாவில் எங்­கி­ருந்து பூதம் கிளம்பும் என்று தெரி­யாத நிலை இருக்கும். அதற்­காக, அமைச்­சர்கள், அதி­கா­ரி­களைக் கொண்ட பெரிய பட்­டா­ளத்­தையே மஹிந்த ராஜப க் ஷ ஜெனீ­வா­வுக்கு அனுப்பும் வழக்­கத்தைக் கொண்­டி­ருந்தார்.
ஒரு முறை 72 பேர் கொண்ட அரச குழு­வொன்று கூட ஜெனீ­வா­வுக்குச் சென்­றது. அந்­த­ள­வுக்கு அர­சாங்­கத்­துக்கு சர்­வ­தேச அழுத்­தங்கள் காணப்­பட்­டன.
ஆனால், இப்­போ­தைய அர­சாங்கம், ஜெனீ­வாவைத் திருப்­திப்­ப­டுத்தும் விட­யத்தில் பெரி­தாக எதையும் சாதிக்­கா­விட்­டாலும், ஜெனீவா குறித்து அலட்­சி­ய­மான, நிலையில் தான் இருக்­கி­றது.ஜெனீவா நெருக்­க­டியை வென்று விடலாம் என்ற நம்­பிக்­கையை அமைச்­சர்கள் இல­கு­வாக வெளிப்­ப­டுத்­து­கி­றார்கள். இது, மனித உரிமை விவ­கா­ரங்­களில் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களால் ஏற்­பட்ட நம்­பிக்­கை­யல்ல.
அதற்கும் அப்பால், இலங்­கைக்கும், மேற்­கு­லக நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உற­வு­களின் நெருக்­கத்­தினால் ஏற்­பட்­டுள்ள நம்­பிக்கை என்றே குறிப்­பி­டலாம்.
குறிப்­பாக அமெ­ரிக்­கா­வுடன் இலங்­கைக்கு ஏற்­பட்­டுள்ள நெருக்­க­மான உறவு, ஜெனீவா நெருக்­க­டி­களில் இருந்து பெரு­ம­ளவில் விடு­ப­டு­வ­தற்கு அர­சாங்­கத்­துக்குக் கைகொ­டுத்­தி­ருக்­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை.
மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்­கத்­துக்கு கிடைக்­கா­த­ள­வுக்கு கால­அ­வ­கா­சங்கள் கொடுக்­கப்­ப­டு­கின்­றன. அதி­க­ளவு அழுத்­தங்­களும் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வ­தில்லை. இல­கு­வாகச் சொல்­வ­தானால், ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை இப்­போது இலங்கை விட­யத்தில் உச்­சக்­கட்ட பொறு­மையைக் கடைப்­பி­டிக்­கி­றது.
இதெல்­லா­வற்­றையும் சாத்­தி­ய­மாக்­கி­யது, ஆட்சி மாற்றம் தான். கொடுத்த வாக்­கு­று­தியை காப்­பாற்­றாமல் விட்­டாலும் கூட, அச்­ச­மின்றி ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் கூட்ட அரங்­கிற்குள் துணிச்­ச­லோடு பிர­வே­சிக்கும் நிலையில் அர­சாங்கம் இருக்­கி­றது. இந்த அர­சாங்கம் பத­விக்கு வந்த மூன்று மாதங்­களில், ஐ.நா. மனித உரி­மைகள் பேரவைக் கூட்­டத்­தொ­டரில் இலங்­கைக்கு எதி­ரான அடுத்த தீர்­மா­னத்தைக் கொண்டு வர­வி­ருந்­தது அமெ­ரிக்கா.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், பொறுப்­புக்­கூறும் பொறி­மு­றையை உரு­வாக்க அர­சாங்கம் ஆறு­மாத கால­அ­வ­காசம் கேட்­டது, ஆனால் அந்த ஆறு மாதங்­க­ளுக்குள் எதையும் செய்­யா­ம­லேயே, 2015 செப்­ரெம்பர் அமர்­வுக்குச் சென்­றது இலங்கை அர­சாங்கம். அங்கு இன்­னொரு தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. அதற்கு இலங்­கையும் இணங்கி, இணை அனு­ச­ரணை வழங்­கி­யது. வெளி­நாட்டு நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய நம்­ப­க­மான பொறுப்­புக்­கூறல் பொறி­முறை ஒன்று உரு­வாக்­கு­வ­தாக அர­சாங்கம் வாக்­கு­றுதி அளித்­தது. இந்த தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு, எட்டு மாதங்கள் கழிந்து விட்ட நிலையில், மீண்டும் ஐ.நா. மனித உரி­மைகள் பேரவை கூடப் போகி­றது. ஆனால் பொறுப்­புக்­கூறும் பொறி­முறை ஒன்றை அர­சாங்கம் இன்­னமும் உரு­வாக்­க­வில்லை. அதனை அமைப்­ப­தற்­கான எந்­த­வொரு பணி­யையும் முன்­னெ­டுக்­க­வில்லை.
பொறுப்­புக்­கூறல் சார்ந்த விவ­கா­ரங்கள் தொடர்­பாக இலங்கை அர­சாங்கம் எடுத்­துள்ள நட­வ­டிக்­கை­களின் முன்­னேற்றம் தொடர்­பாக இந்தக் கூட்­டத்­தொ­டரில் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செயிட் ராட் அல் ஹுசேன் வாய்­மொழி அறிக்­கையை சமர்ப்­பிக்க வேண்டும்.

ஆனால், பொறுப்­புக்­கூறல் சார்ந்து அர­சாங்­கத்­தினால் என்ன நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது என்று அவர் கூறப்­போ­கிறார் என்று தெரி­ய­வில்லை.
இந்த நிலையில், காணா­மற்­போனோர் பிரச்­சி­னையைக் கையா­ளு­வ­தற்­கான செய­லகம் ஒன்றை அமைக்க கடந்த வாரம் அமைச்­ச­ர­வையில் அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.
இந்த செய­ல­கத்தை அமைப்­ப­தற்கு, எட்டு மாதங்கள் பிடித்­தி­ருக்­கின்­றன என்றால், காணா­மற்­போ­ன­வர்கள் தொடர்­பாக இந்தச் செய­லகம் நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தற்கு இன்னும் எத்­தனை காலம் ஆகுமோ? என்ற கேள்வி தான் எழு­கி­றது.
பொறுப்­புக்­கூறல் என்­பது தனியே காணா­மற்­போனோர் விவ­கா­ரத்­துடன் சம்­பந்­தப்­பட்ட விட­ய­மல்ல. போர்க்­குற்­றங்கள், மனி­தா­பி­மா­னத்­துக்கு எதி­ரான குற்­றங்கள், மனித உரிமை மீறல்கள் என்று பல்­வேறு பிரச்­சி­னைகள் தீர்க்­கப்­ப­டா­தி­ருக்­கின்­றன.
இந்தப் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்­கான வழி­மு­றை­களை அர­சாங்கம் இன்­னமும் கூட தேட­வில்லை.
அதே­வேளை, மீறல்கள் குறித்த விசா­ர­ணை­களில் வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளுக்கு இட­ம­ளிப்­ப­தில்லை என்ற நிலைப்­பாட்டை அர­சாங்கம் எடுத்­தி­ருப்­ப­தாக, அண்­மையில் முப்­படை அதி­கா­ரி­க­ளிடம், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார்.
இதன் மூலம், ஜெனீ­வாவில் அர­சாங்கம் இணை அனு­ச­ரணை வழங்கி ஏற்றுக் கொண்ட தீர்­மானம் கேள்­விக்­குள்­ளாக்­கப்­ப­டு­கி­றது, அர­சாங்கம் ஜெனீ­வாவில் கொடுத்த வாக்­கு­று­தி­களை அப்­ப­டியே நிறை­வேற்­று­கின்ற எண்­ணத்தில் இல்லை என்­பது இந்த விவ­கா­ரத்தின் மூலம் வெளிப்­ப­டு­கி­றது.
அதை­விட, குற்­ற­வா­ளி­களைத் தண்­டிக்கும் பொறி­முறை ஒன்றை உரு­வாக்­கவும் அர­சாங்கம் தயா­ராக இல்லை. அதற்குப் பதி­லாக உண்­மை­களை ஒப்­புக்­கொள்ள வைக்கும் ஒரு பொறி­மு­றையை தான் தேர்வு செய்­துள்­ளது. இது தென்­னா­பி­ரிக்­காவில் கையா­ளப்­பட்­டது.
அந்தப் பொறி­மு­றையின் ஊடாக, குற்­ற­மி­ழைத்த படை­யி­னரை தண்­ட­னையில் இருந்து தப்­பிக்க வைக்­கவே முயற்­சிக்­கி­றது அர­சாங்கம். அர­ச­ப­டை­க­ளி­னதும், சிங்­கள மக்­க­ளி­னதும் எதிர்ப்பைச் சம்­பா­தித்துக் கொள்­வதை தவிர்ப்­ப­தற்­கா­கவே, அர­சாங்கம் இந்த முறையில் அணுகுகின்றது.
இந்தக் கட்டத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினரான தமிழ் மக்களின் உணர்வுகளையோ எதிர்பார்ப்புகளையோ அரசாங்கம் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. சர்வதேச சமூகத்துக்கும் அதுபற்றிய அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.
பொறுப்புக்கூறல் சார்ந்த எந்த ஒரு உருப்படியான செயற்றிட்டத்தையும், இன்னமும் நடைமுறைப்படுத்தாத நிலையில் தான், துணிச்சலோடு அடுத்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரை எதிர்கொள்ளத் தயாராகியிருக்கிறது அரசாங்கம்.
இதனால் தான், இம்முறை ஜெனீவா கூட்டத்தொடர் பற்றிய ஆர்வம் தமிழ் மக்களிடம் குறைந்து போயிருக்கிறது. அதுமட்டுமன்றி, சர்வதேச சமூகம் தொடர்பாக தமிழ் மக்களுக்கு இருந்து வந்த நம்பிக்கைகளும் தளர்ந்து போகத் தொடங்கியுள்ளதையே இது உறுதிப்படுத்துகிறது.

நன்றி வீரகேசரி
கச்சத்தீவை மீட்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் என்று, தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின்னர் அவர் அளித்த பேட்டியின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் 89 உறுப்பினர்களைப் பெற்றுள்ள திமுக, பலம் பொருந்திய எதிர்க்கட்சியாக விளங்குகிறது. அவரை பேரவை திமுக கட்சித் தலைவராக அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் அண்மையில் தேர்வு செய்தனர்.
பேரவையில் அதிக உறுப்பினர்களைப் பெற்றுள்ள கட்சியாக திமுக விளங்குவதால், அந்தக் கட்சிக்கே எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அந்தக் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக அங்கீகாரம் செய்யப்பட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினை பேரவைத் தலைவர் பி.தனபால் அங்கீகாரம் செய்துள்ளதாக சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் சனிக்கிழமை அறிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்பவர், பேரவைத் தலைவர், துணைத் தலைவருக்கு அடுத்த நிலையில் வருகிறார். அரசு கொறடாவுக்கு என்னென்ன சலுகைகள் வழங்கப்படுமோ அந்தச் சலுகைகள் அனைத்தும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் அளிக்கப்படும், என்பது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 150 கோடி டாலர் கடனுதவி வழங்க சர்வதேச நிதியம்  ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து ஐ.எம்.எப். வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் பொறுப்பேற்றுள்ள மைத்ரிபால சிறீசேனா தலைமையிலான அரசு பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச சூழ்நிலைகளால் அந்நாட்டின் பொருளாதாரம் தற்போது நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
இதனை எடுத்துக் காட்டும் வகையில், கடந்த ஆண்டில் டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 131லிருந்து 147-ஆக வீழ்ச்சி கண்டது.
இதனை தடுப்பதற்காக அந்நாட்டின் மத்திய வங்கி ரூ. 20,000 கோடியை செலவிட்டது. இதனால், அன்னியச் செலாவணி கையிருப்பு 2015-இல் வெகுவாக வீழ்ச்சி கண்டது. இது, இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது.
இதனை கருத்தில் கொண்டு சர்வதேச நிதியம், இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடி நிலையிலிருந்து மீண்டு வர உதவிடும் வகையில் 150 கோடி டாலர் கடனுதவி வழங்க முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக 16.8 கோடி டாலர் மதிப்பிலான கடனுதவி உடனடியாக வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை காலாண்டு மதிப்பீடுகளின் அடிப்படையில் ஆறு கட்டங்களாக வழங்கப்படும்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை இனிமேல் முக்கியமான ஒன்றாக இருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த இந்த பரீட்சை புதிய கல்வி கட்டமைப்பின் அடிப்படையில் வெறுமனே மாணவர்களின் வகுப்பேற்றத்தை ஊக்குவிக்கும் ஒன்றாகவே இருக்கும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் பின்னர் பல்கலைகழகத்திற்கு பிரவேசிக்க எதிர்பார்த்துள்ளதாக மாணவர்களுக்கு சில பாடங்கள் கட்டாயமானது என அவர் தெரிவித்தார்.
கல்வி பொதுத் தராதர சாதரண தரப்பரீட்சையின் பின்னர் ஒவ்வொரு மாணவரும் வகுப்பேற்றப்படுவார்கள் என நீர்கொழும்பிலுள்ள பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது பிரதமர் குறிப்பிட்டார்.
மாணவர்களின் பரீட்சை சுமையை குறைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
உலகில் மிகவும் வலிமையான நாடாக கருதப்படும் அமெரிக்காவின் கல்வி கட்டமைப்பில் எந்தவொரு பரீட்சையும் இல்லை என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அவ்வாறான கட்டமைப்பை நாமும் அமுல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.








Copyright © 2016 Kilinochchi