ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் ‘2.0’. ரஜினிகாந்த், எமி ஜாக்சன் நடிக்கும் இப்படத்தில் அக்ஷய் குமார் வில்லனாக நடிப்பது நாமறிந்ததே. இந்நிலையில் தொடர்ந்து தென்னிந்திய படங்களில் வில்லனாக நடிக்க அக்ஷய் குமார் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்திலும் அக்ஷய் குமார் வில்லனாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் கதை மும்பையை அடிப்படையாகக் கொண்டு சமூக விழிப்பு உணர்வுடன் எடுக்கப்பட உள்ளதாம்.
இந்தி வெர்ஷனில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பரினீத்தி சோப்ராவிடம் பேசி வருகிறார்கள். பிரம்மோத்சவம்’ படத்தைத் தொடர்ந்து மகேஷ் பாபு நடிக்கும் இப்படம் முதல் நேரடித் தமிழ் படம் . ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிப் படமாக உருவாக இருக்கிறது. தற்சமயம் குடும்பத்துடன் லண்டனில் விடுமுறையில் இருக்கும் மகேஷ்பாபு இந்தியா திரும்பியவுடன் இப்படத்தின் வேலைகள் ஆரம்பமாகவிருக்கின்றன














No comments: