வட்டக்கச்சிப்பகுதியில் கைது செய்யப்பட்டவக்கு இருபதாயிரம் ரூபா தண்டம்

கிளிநொச்சி வட்டக்கச்சிப்பகுதியில் கசிப்புடன் கைது செய்யப்பட்ட 68 வயதுடைய முதியவருக்கு இருபதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் கடந்த வருடம் கசிப்புடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆயர்படுத்திய நிலையில் குறித்த முதியவர் சுற்றவாளி என மன்றுக்கு தெரிவித்ததையடுத்து நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் செல்வதறற்கு அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து விளக்கத்திற்காக தவணையிடப்பட்டு வந்த நிலையில் விளக்கத்திற்காக கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் 68 வயதுடைய முதியவர் குறித்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதையடுத்து மாவட்ட நீதிவான் நீதிமன்றம் குறித்த குற்றச்சாட்டுடன் தொடர்புபட்ட முதியவரின் வயதினை கருத்திற்கொண்டு குறித்த நபருக்கு இருபதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

No comments:

Copyright © 2016 Kilinochchi