கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி அரச சீல் சாராயத்தினை பொலிசாருக்கு விற்பனை செய்தமை மற்றும் அரச சீல் சாராயத்தினை விற்பனைக்காக உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு ஏழாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதிப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 175 மில்லி லீற்றர் அரச சீல் சாராயத்தினை பொலிசாருக்கு விற்பனை செய்தமை மற்றும் 1625 மில்லி லீற்றர் அரச சீல் சாராயத்தினை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரைக் கைது செய்த பொலிசார் குறித்த பெண்ணை (01-06-2016) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆயர்படுத்திதையடுத்து குறித்த பெண்ணுக்கு ஏழாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி முகமாலை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிய சாரதிக்கு இருபத்தி ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி முகமாலைப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச் சென்ற ஒருவரை கைது செய்த பளைப்பொலிசார் குறித்த நபரை (01-06-2016) பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து இருபத்தி ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் மணல் பறிமுதல் செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
Posted by
Theepan N
|
Friday, June 3, 2016 |
7:54:00 PM














No comments: