கிளிநொச்சியில் பெண் சட்டத்தரணிக்கு அபகீர்த்தி

கிளிநொச்சியில் உள்ள பெண் சட்டத்தரணி ஒருவருக்;கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இணையத்தளங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 'கிளிநொச்சியில் உயர்பதவியில் இருக்கும் பெண் சட்டத்தரணி ஒருவருக்கு அபகீரத்தியை ஏற்படுத்தும் வகையில் அவரது கணவர் தொடர்பாகவும் அவரது குடும்பத்துக்கு அவப்பெயரை உருவாக்கவும் நீதிமன்றை அவமதிக்கும் வகையிலும் வெளியான செய்தி தொடர்பாக கடும் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். குறித்த செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை. இது திட்டமிட்டு மேற்;கொள்ளப்பட்ட ஓர் விடயம்' என கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.

No comments:

Copyright © 2016 Kilinochchi