மாத்தறை மாவட்ட வருமான வரி அதிகாரி ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் 03.06.2016 கைது செய்யப்பட்டுள்ளார்.
பெறுமதியான இடம் ஒன்றை குறைந்த பெறுமதியில் மதிப்பீடு செய்வதற்கு நபர் ஒருவரிடம் இருந்து 10,000 ரூபாய் இலஞ்சம் பெற்ற சந்தர்ப்பத்திலேயே, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை சந்தேகநபரை இன்று மாத்தறை நீதவானிடம் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து அவரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














No comments: