மீண்டும் வெடிக்கும் பிளவு

வடக்கின் அபி­வி­ருத்தி விவ­கா­ரத்தில், மீண்டும் அதி­காரப் போராட்டம் உரு­வா­கி­யி­ருக்­கி­றது. கடந்­த­வாரம் யாழ்.நகர அபி­வி­ருத்தி தொடர்­பாக, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நடத்­திய கூட்­டத்தை, வடக்கு மாகாண முத­ல­மைச்­சரும், அமைச்­சர்­களும் புறக்­க­ணித்­தி­ருக்­கின்­றனர்.
வடக்கு மாகா­ண­சபை உரு­வாக்­கப்­பட்ட பின்னர், இது­போன்று கூட்­டங்கள் நடத்­தப்­ப­டு­வதும், புறக்­க­ணிப்­புகள் இடம்­பெ­று­வதும் இதுதான் முதல் முறை அல்ல.
மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியில் இருந்­த­போது, ஆளு­ந­ராக இருந்த மேஜர் ஜெனரல் சந்­தி­ர­சிறி மற்றும், பிர­தம செய­லா­ள­ராக இருந்த விஜ­ய­லட்­சுமி ரமேஸ் ஆகி­யோரை வைத்து, மத்­திய அர­சாங்கம், தனி­யாட்சி நடத்­தி­யது.
வடக்கு மாகாண சபையை கிள்­ளுக்­கீ­ரை­யாகப் பாவித்­த­துடன், வடக்கு மாகா­ண­ச­பை­யுடன் கலந்­தா­லோ­சிக்­கா­ம­லேயே முடி­வு­களும் எடுக்­கப்­பட்­டன.
இதனால், மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில், கடைசி வரையில் மத்­திய, - மாகாண அர­சாங்­கங்­க­ளுக்கு இடையில் புரிந்­து­ணர்வு ஏற்­ப­ட­வில்லை. இறு­தி­வ­ரையில் பனிப்போர் நிலை­மையே நீடித்து வந்­தது.
கடந்த ஆண்டு ஜன­வரி மாதம் மைத்­தி­ரி­பால சிறி­சேன அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர், வடக்கு மாகாண ஆளு­ந­ராக எச்.எம்.ஜி.எஸ்.பலி­ஹக்­கார நிய­மிக்­கப்­பட்டார். பிர­தம செய­லா­ளரும் மாற்­றப்­பட்டார். அதற்குப் பின்னர், மத்­திய, - மாகாண அர­சு­க­ளுக்கு இடையில் ஓர­ள­வுக்கு சுமு­க­மான உற­வுகள் ஏற்­பட்­டன.
ஆனாலும், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ருக்கும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கும் இடையில், முரண்­பா­டுகள் வெடித்­தன. அந்த முரண்­பா­டுகள், மேடை­களில் பகி­ரங்­க­மாகப் பேசப்­படும் அள­வுக்கும் சென்­றி­ருந்­தன.
எனினும், அந்த முரண்­பா­டுகள், இந்த ஆண்டு யாழ்ப்­பா­ணத்தில் நடந்த தைப்­பொங்கல் விழா­வுடன் ஓர­ள­வுக்கு முடி­வுக்கு வந்­தி­ருக்­கின்ற நிலையில், புதிய ஆளு­ந­ராக ரெஜினோல்ட் குரே நிய­மிக்­கப்­பட்டார்.
மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரப்­ப­கிர்வு வழங்­கப்­பட வேண்டும் என்ற கொள்­கையை கடைப்­பி­டித்த ரெஜினோல்ட் குரே, வடக்கின் ஆளு­ந­ராக பொறுப்­பேற்­றது, மத்­திய, - மாகாண அர­சு­க­ளுக்கு இடை­யி­லுள்ள இடை­வெ­ளியைக் குறைக்கும் என்ற பர­வ­லான எதிர்­பார்ப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தது.
ஆனால், ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பத­வி­யேற்பு நிகழ்­வி­லேயே சர்ச்­சை­க­ளுக்கு பிள்­ளையார் சுழியைப் போட்டார். அடுத்­த­டுத்து அவர் வெளி­யிட்ட பல்­வேறு கருத்­துக்கள், தமிழ் மக்­களை முகம் சுழிக்க வைத்­த­துடன், வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரையும், மாகா­ண­ச­பை­யையும், அதி­ருப்தி கொள்ள வைத்­தது.
ஒரே நிகழ்­வு­களின் போது, வெளிக்­காட்டிக் கொள்­ளா­வி­டினும், முத­ல­மைச்­சரும், ஆளு­நரும் அவ்­வப்­போது, ஒரு­வரை ஒருவர் விமர்ச்­சிக்­கின்ற நிலை உரு­வா­கி­யி­ருக்­கி­றது. இப்­ப­டி­யான சூழ­லில்தான், யாழ். நகர அபி­வி­ருத்தி தொடர்­பான கூட்­டத்தை, ஆளுநர் தனது செய­ல­கத்தில் கடந்­த­வாரம் கூட்­டி­யி­ருந்தார்.உலக வங்கி அளிக்க முன்­வந்­துள்ள, 5.5 கோடி டொலர் நிதி­யு­த­வியில், மேற்கொள்ளும் இந்த திட்­டத்­துக்­கான வரை­வு­களைத் தயா­ரிக்கும் ஒரு கூட்­டமே இது. இலங்கை நாணயப் பெறு­ம­தியில், கிட்­டத்­தட்ட 800 கோடி ரூபாவில் மேற்­கொள்­ளப்­படும் அபி­வி­ருத்தித் திட்டம். போர் முடி­வுக்கு வந்த பின்னர், நகர அபி­வி­ருத்தி ஒன்­றுக்­காக வடக்கில் மேற்­கொள்­ளப்­படும் அதி­க­பட்ச நிதி ஒதுக்­கீ­டாக இத­னையே கரு­தலாம். ஆனால், இந்தக் கூட்­டத்தை வடக்கு மாகாண முத­ல­மைச்­சரும், அமைச்­சர்­களும் புறக்­க­ணித்­தி­ருக்­கின்­றனர்.
அதே­வேளை, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களில் ஒரு பகு­தி­யி­னரும், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களில் ஒரு பகு­தி­யி­னரும் மாத்­திரம் இதில் பங்­கேற்­றுள்­ளனர்.
வெளிப்­ப­டை­யாக கூறு­வ­தானால், இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சி மற்றும் புளொட் ஆகி­ய­வற்றின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும், மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களும் மாத்­திரம் இந்தக் கூட்­டத்தில் பங்­கேற்க, கூட்­ட­மைப்பில் உள்ள ஏனைய கட்­சி­களின் பிர­தி­நி­திகள் இதனைப் புறக்­க­ணித்­தி­ருக்­கி­றார்கள்.
(08 ஆம் பக்கம் பார்க்க)
மீண்டும் வெடிக்கும்...
(01 ஆம் பக்கத் தொடர்சி)
பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாவை சேனா­தி­ராசா, சுமந்­திரன், சர­வ­ண­பவன், சித்­தார்த்தன் ஆகி­யோரும், வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவ­ஞானம், உறுப்­பி­னர்­க­ளான ஆனோல்ட், சுகிர்தன், சயந்தன், பரஞ்­சோதி, அஸ்மின், சிவ­யோகம், ஆகி­யோரும் இதில் கலந்து கொண்­டனர்.
கடந்த ஆண்டு இறு­தியில் தமிழ் மக்கள் பேரவை உரு­வாக்­கப்­பட்ட போது, முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக, வடக்கு மாகா­ண­ச­பையில் போர்க்­கொடி எழுப்­பிய உறுப்­பி­னர்­களே ஆளு­நரின் இந்தக் கூட்­டத்தில் பங்­கேற்­றனர்.
பெரி­ய­ள­வி­லான அபி­வி­ருத்தித் திட்டம் ஒன்று முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு உரு­வா­கி­யி­ருக்­கின்ற இந்தக் கூட்­டத்தை முத­ல­மைச்சர் புறக்­க­ணித்­தி­ருப்­பது நியா­யமா என்ற பர­வ­லான கேள்­விகள் இருக்­கின்­றன.
அதே­வேளை, வடக்கு மாகா­ண­சபை ஊடாக முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய அபி­வி­ருத்தித் திட்­டங்­களை, மத்­திய அர­சாங்கம் ஆளு­நரைப் பயன்­ப­டுத்தி, மீண்டும் கையாளத் தொடங்­கு­கி­றதா என்ற சந்­தே­கத்­தையும் இந்த விவ­காரம் எழுப்ப வைத்­தி­ருக்­கி­றது.
இந்த அபி­வி­ருத்தித் திட்டம் தொடர்­பாக தாம் ஏற்­க­னவே பல்­வேறு தரப்­பு­க­ளுடன் பேசி­யி­ருப்­ப­தா­கவும், இந்­த­நி­லையில், ஆளு­நரின் ஊடாக இதனை முன்­னெ­டுப்­ப­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் துணை­போ­வ­தா­கவும் முத­ல­மைச்சர் குற்­றம்­சாட்­டி­யி­ருக்­கிறார்.
வடக்கு மாகா­ண­ச­பை­யுடன் இணைந்து பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் செயற்­ப­டு­வ­தற்குப் பதி­லாக, ஆளு­ந­ருடன் இணைந்து செயற்­பட அவர்கள் முனை­வ­தான குற்­றச்­சாட்டை முத­ல­மைச்சர் வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.
அதே­வேளை, இன்­னொரு பக்­கத்தில் அபி­வி­ருத்தித் திட்­டங்­களில் ஆளு­னரின் தலை­யீ­டுகள் இருக்­காது என்றும், அவரைத் தேவை­யின்றி விமர்­சித்து, அபி­வி­ருத்தித் திட்­டங்­களை குழப்­பக்­கூ­டாது என்றும், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனும் கருத்து வெளி­யிட்­டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், ஒரு பகு­தி­யா­கவும், முத­ல­மைச்சர் உள்­ளிட்ட மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களில் கணி­ச­மானோர் இன்­னொரு பகு­தி­யா­கவும் செயற்­பட முனை­வது இதி­லி­ருந்து புலப்­ப­டு­கி­றது.
வடக்கு மாகா­ண­சபை செயற்­படத் தொடங்­கிய பின்னர், அதன் பெரும்­பா­லான காலத்தை, மத்­திய அரசு மீதான விமர்­ச­னங்­க­ளிலும், மத்­திய அரசின் தலை­யீ­டுகள் பற்றி குற்­றம்­சாட்­டு­வ­தி­லுமே கழித்து விட்­டது. இப்­போதும் அந்த நிலை மாறி­வி­ட­வில்லை.
அதே­வேளை, தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­புக்குள் இரண்டு அணி­களை உரு­வாக்கி, ஒன்­றுடன் ஒன்றை மோத­விடும் காரி­யத்தை, மத்­திய அர­சாங்கம் மிகக் கச்­சி­த­மா­கவே முன்­னெ­டுக்­கி­றது என்­பதை இப்­போ­தைய நிகழ்­வு­களில் இருந்து உணர முடி­கி­றது.
வடக்கு மாகா­ண­சபை ஒன்று உரு­வாக்­கப்­பட்­டுள்ள நிலையில், யாழ். நகர அபி­வி­ருத்தி தொடர்­பாக ஒரு திட்­ட­மி­டலை மேற்­கொள்ளும் போது, வடக்கு மாகா­ண­ச­பையை பங்­கா­ளர்­க­ளாக்­கு­வதை விட்டு, பார்­வை­யா­ளர்­க­ளாக மாற்ற முயன்­றி­ருக்­கி­றது மத்­திய அர­சாங்கம்.
இதுவும் ஒரு அதி­காரப் பறிப்பு நட­வ­டிக்­கைதான். அதற்கு தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பையும் துணை போகச் செய்­தி­ருப்­பது தான், மத்­திய அர­சாங்­கத்தின் சாது­ரியம்.
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்குள் இது­வரை காலமும் இருந்து வந்த முரண்­பா­டுகள் இப்­போது வேறொரு வடி­வத்தை எடுக்கத் தொடங்­கி­யுள்­ளது.
கூட்­ட­மைப்­புக்குள் ஏற்­பட்ட முரண்­பா­டுகள், தமிழ் மக்­க­ளுக்கு வருத்­தத்தைக் கொடுத்­தி­ருந்­தாலும், அது அவர்­களின் கட்சி சார்ந்த பிரச்­சினை என்றே பலரும் ஒதுங்கிப் போயி­ருந்­தனர்.
ஆனால்அ இப்­போது, ஒரு கட்­சிக்குள் நிலவும் முரண்­பா­டுகள், வடக்கின் அபி­வி­ருத்­தியில் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் நிலை உரு­வா­கின்­ற­போது அதனைத் தமிழ் மக்கள் வேடிக்கை பார்ப்­பார்கள் என்று நினைத்துக் கொள்­ளக்­கூ­டாது.
யாழ். நகர அபி­வி­ருத்­திக்­காக கிடைத்­துள்ள மிகப்­பெ­ரிய தொகையை பய­னுள்ள வகையில் செல­விடும் பொறி­மு­றையை உரு­வாக்கும் விட­யத்தில் உள்­ளக அர­சியல் முரண்­பா­டுகள் பின்­ன­டைவை ஏற்­ப­டுத்தி விடும் போலத் தெரி­கி­றது.
உலக வங்­கியின் நிதி­உ­த­வி­யுடன், இர­ணை­மடுக் குளத்­தி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்­துக்கு குடி­நீரை எடுத்துச் செல்லும் திட்­டமும் கூட, தடைப்பட்டுப் போனதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக முரண்பாடுகளும் எதிர்ப்புகளும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது.
வடக்கில் ஒரு அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுப்பதற்கு ஒருவரை ஒருவர் குட்டி முந்திக் கொள்வதும், கோள் சொல்வதும், தமிழர் அரசியலின் சாபக்கேடாகி விட்டது.
வடக்கிற்குள் உள்ள மக்கள் குடிநீரைப் பகிர்ந்து கொள்வதற்கு - ஒரு திட்டத்தை ஒற்றுமையாக முன்னெடுப்பதற்கே ஒன்றுபட முடியாதளவுக்கு, தமிழர்கள் மத்தியில் பிளவுகளும் பிரிவினைகளுக்கும் இருக்கும்போது, அரசியல் தீர்வு ஒன்றை சுலபமாக எட்டமுடியும் என்று கருதத் தோன்றவில்லை.
இந்தப் பிளவுகள் தான், கடந்த காலங்களில் தமிழர் தரப்பு தோல்வியையும் அழிவுகளையும் சந்திக்கக் காரணமாயி்ற்று.
தமிழர்களின் பிளவுகளை சிங்கள அரசியல் தலைமைகள் எவ்வாறு பயன்படுத்திக் கொண்டு பயன்பெற்றனவோ, அதுபோலத்தான், இப்போதும், பயனடைவதற்கு முயற்சிக்கின்றன.

நன்றி -வீரகேசரி 

No comments:

Copyright © 2016 Kilinochchi