கிளிநொச்சி பூநகரி பகுதியில் தொலைபேசியில் உரையாடியவாறு டிப்பர் வாகனத்தை செலுத்திச்சென்ற சாரதிக்கு ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் கடுமையாக எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பூநகரி பகுதியில் கடந்த வாரம் தொலைபேசியில் உரையாடியவாறு டிப்பர் வானத்தை செலுத்திச் சென்ற ஒருவரை கைது செய்து குறித்த சாரதிக்கெதிராக வழக்குப்பதிவு செய்த பூநகரி பொலிசார் குறித்த சாரதியை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் இது போன்ற குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபடும் பட்சத்தில் அதிகூடிய தண்டப்பணம் விதிக்கப்படுவதுடன் சாரதியனுமதிப்பத்திரமும் இடைநிறுத்தி வைக்கப்படும் என்றும் கடும் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
Home
kilinochchi
பூநகரியில் தொலைபேசியில் உரையாடியவாறு வாகனத்தை செலுத்தி சாரதிக்கு ஐயாயிரம் ரூபா தண்டம்
Posted by
Theepan N
|
Friday, June 3, 2016 |
7:52:00 PM














No comments: