சகல பாடசாலை வகுப்பறைகளுக்கும் ‘டெப்’ வழங்கப்படும்! பிரதமர் அறிவிப்பு

நாட்டிலுள்ள சகல பாடசாலை வகுப்பறைகளுக்கும் ‘டெப்’ வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நீர்கொழும்பு நிவிஸ்டர்ட் பெண்கள் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இன்று கல்வியை வெறும் கடதாசியில் மட்டும் பெற்றுவிட முடியாது.

புதிய தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி அவற்றின் மூலம் கல்வியைப் பெறுவதே இன்றைய மாணவர்கள் விரும்புவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று அனைவரினதும் கைகளிலும் கையடக்கத் தொலைபேசி காணப்படுகின்றது. அநேகர் அதை குறுந்தகவல் அனுப்பவும்,செல்பி எடுக்கவுமே பயன்படுத்துகின்றனர்.

ஆனால் கைத்தொலைபேசியானது எமக்கு கல்வி கற்பதற்குரிய சிறந்த மார்க்கம் என்றும் பிரதம் தெரிவித்துள்ளார்.

எனவே எதிர்காலத்தில் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த நாட்டில் உள்ள சகல பாடசாலை வகுப்பறைகளுக்கும் டெப் வழங்குவதற்கான ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Copyright © 2016 Kilinochchi