வவுனியாவில் பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம்

வவுனியா நெடுங்கேணியில் பத்து வயது பாடசாலை மாணவி துஸ்பிரயோகம்! சந்தேக நபர் ஒரு போதைப்பொருள் வியாபாரி மக்கள் குற்றச்சாட்டு

வவுனியா நெடுங்கேணி ஒலுமடுவில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளார். தரம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்பிற்கு சென்று வரும்போதே பாடசாலைக்கு முன்பாக சாப்பாட்டுக்கடை வைத்திருக்கும் 54 வயதுடைய முதியவர் (பொன்னையா சிவசுப்பிரமணியம்) ஒருவரால் 27-05-2016 அன்று பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த சிறுமியின் தாயார்,

சம்பவதினம் பாடசாலைக்கு உடனடியாக வருமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை தொடர்ந்து பாடசாலைக்கு சென்று சம்பவத்தை ஆசிரியர்களிடம் கேட்டறிந்துகொண்டதாகவும் அதனைத்தொடர்ந்து மகளிடம் விடயத்தை கேட்டபோது அவர் பயத்தில் எதுவும் சொல்லாமல் இருந்ததுடன்! மகள் உண்மையை கூறினால் அப்பா, அம்மாவின் தலையை வெட்டி உங்களுடைய காணிக்குள் எறிந்துவிடுவேன் என சந்தேக நபர் மிரட்டியதால் மகள் என்னிடம் உண்மையை கூற பயப்பட்டதன் காரணமாக 119 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவலை பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து பொலிசார் சந்தேக நபரை கைது செய்ததுடன் மகளை வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் தெரிவித்தார்.

பாடசாலை சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் குறித்து நெடுங்கேணி சிறுவர் நன்நடத்தை அதிகாரி எஸ்.யுவராஜ்யுடன் தொடர்புகொண்டபோது

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள போதும் வவுனியா வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியின் அறிக்கை கிடைத்த பின்னரே சிறுமி உடல்ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டாரா அல்லது பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளாரா என அறிந்துகொள்ள முடியும் என தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஊர் மக்கள் சந்தேக நபர் மேற்குறிப்பிட்ட தேநீர் கடையில் போதைப்பொருட்களை (கஞ்சா) விற்பனை செய்து வருவதாகவும் இச்செயற்பாடானது அதிகாரிகளின் அனுசரணையுடன் நடைபெற்று வருவதுடன் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மறைமுகமாக மிரட்டலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

No comments:

Copyright © 2016 Kilinochchi