முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரம் பெறும் வயதெல்லையை 23 ஆக உயர்த்துமாறு முச்சக்கர வண்டி சங்கங்கள் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளன.
வீதிப் பாதுகாப்புக்கான தேசிய சபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது இந்த யோசனையை முன்வைத்ததாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் தொழிற்சங்க செயலாளர் ரி.ஆர்.ஆர். பள்ளி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முச்சக்கர வண்டி சங்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகள் சிறந்தவை எனவும் அவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள வீதி பாதுகாப்புக்கான தேசிய சபையின் தலைவர் டொக்டர் சிசிர கோதாகொட, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சருடன் கலந்துரையாடி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.














No comments: